ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் 1961 இல் பிறந்தார். தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாகவும் , மருத்துவராகவும் ராமையா மருத்துவக் கல்லூரியில் பயின்று நிறைவு செய்தார் . ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவையாற்றிக் கொண்டே தனது கனவான நரம்பியல் மருத்துவம் பயில தன்னைத் தயார் படுத்திக் கொண்டார். 1997 இல் மதுரை மருத்துவக் கல்லூரியில் M.ch சேர்ந்து 2002 இல் சிறந்த மாணவர் என்ற பட்டத்தோடு நிறைவு செய்தார்.
தான் பயின்ற மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகள் நரம்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார் . இன்று தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராக உள்ளார். 10000க்கும் மேற்பட்ட நரம்பு மற்றும் முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி இன்று பலரின் வாழ்க்கையை மலரச் செய்தவர். மிக முக்கியமாக 1500க்கும் மேற்பட்ட புற்றுநோய் கட்டிக்களை அகற்றும் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளார்.