செண்பக மரம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.
