வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.
