உயிரின் சுவாசம்

10 கோடி மரங்கள் ,100 மாதங்களில் நடவு செய்து பசுமை மாவட்டங்களாகவும், இயற்கைமிகு மண்டலமாகவும் மாற்றுவதே எங்களின் இலக்கு ஆகும் .
10 கோடி மரங்கள்
10 கோடி மரங்கள் , 100 மாதங்களில் அனைத்து உயிரினங்களுக்கும் பயன்படும் வகையில் அனைத்து விதமான மரங்களை நடவு செய்து பராமரிப்பதே எங்கள் நோக்கம் .

100 மாதங்களில்
10 கோடி மரங்கள் கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடவு செய்து பசுமை மற்றும் இயற்கைமிகு மண்டலமாகவும் மாற்றுவதே எங்களின் இலக்கு ஆகும்.
PROGRESS | PROOF






WHAT WE DO

மரக்கன்று விநியோகம் ( Tree Issue )

மரம் நடவு ( Tree Plantation )

திட்டங்கள் ( Projects )
வரும் தலைமுறைக்காக
இலுப்பை, மகிழம், வேங்கை, பூவரசு என இன்னும் ஏராளமான நாட்டு மரங்கள் பெரும் எண்ணிக்கையில் தமிழ்நாடும் முழுவதும் பரவலாக நின்று நிலைத்து காலம் காலமாக தழைத்தோங்கின. இலுப்பையூர், மகிழம்பாடி, விளாத்திக்குளம் என ஊர்களின் அடையாளமாக மரங்களே திகழ்ந்தன. இவைகளில் பெரும்பாலானவை மருத்துவக் குணம் கொண்டவை. இந்த மரங்களின் காற்றை சுவாசித்ததாலேயே நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டின் பாரம்பர்யமான பறவை இனங்களும் சுற்றுச்சூழலை பல வகையிலும் வளப்படுத்தியது. ஆனால் தற்பொழுது இவற்றைப் பார்ப்பதென்பது அரிதாகிவிட்டது.
மனிதனுக்கும் மரங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதனின் வெளிமூச்சுதான் தாவரங்களின் உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு, மனிதனின் உள்மூச்சு. மனிதனுக்கும் தாவரத்துக்கும் உள்ள பந்தமான இந்த இயற்கைச் சுழற்சிதான் பல்வேறு நிலைகளில் மனிதர்களுக்குக் கனிகளாக, விலங்குகளுக்கு உணவாக, பல்வகை உயிரிகளின் ஆதாரமாக விளங்குகிறது. அதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் வாட்டி வதைக்கும் கோடையிலிருந்து மக்களை காக்கும் ஒரே கருவியாக கருதப்படுவது மரங்களே!
நீரின்றி அமையாது உலகு… என்பது வள்ளுவன் வாக்கு. உணவு இல்லாமல் கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது.
” மரம் வளர்ப்போம் , மழை பெறுவோம், நீர் வளம் காப்போம் வாரீர் “

SAPLING SUPPLY




OUR FACEBOOK PAGE
திட்டங்கள் & செய்திகள்

சமீபத்திய திட்டங்கள் & செய்திகள்
OUR VIDEOS
இலக்கு
இதுவரை
மாதங்கள்
மாவட்டங்கள்