” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

சித்தோடு.

டாக்டர். க. மாதேஸ்வரன்

நிர்வாக அறங்காவலர், உயிரின் சுவாசம் அறக்கட்டளை &
தலைவர் , ராயல் கேர் மருத்துவமனை, கோயம்புத்தூர்

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் 1961 இல் பிறந்தார். தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாகவும் , மருத்துவராகவும் ராமையா மருத்துவக் கல்லூரியில் பயின்று நிறைவு செய்தார் . ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவையாற்றிக் கொண்டே தனது கனவான நரம்பியல் மருத்துவம் பயில தன்னைத் தயார் படுத்திக் கொண்டார். 1997 இல் மதுரை மருத்துவக் கல்லூரியில் M.ch சேர்ந்து 2002 இல் சிறந்த மாணவர் என்ற பட்டத்தோடு நிறைவு செய்தார்.

தான் பயின்ற மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகள் நரம்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார் . இன்று தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராக உள்ளார். 10000க்கும் மேற்பட்ட நரம்பு மற்றும் முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி இன்று பலரின் வாழ்க்கையை மலரச் செய்தவர். மிக முக்கியமாக 1500க்கும் மேற்பட்ட புற்றுநோய் கட்டிக்களை அகற்றும் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளார்.

நமது கொங்கு மண்டலத்தில் சகல வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவுடன் , ராயல் கேர் மருத்துவமனையை 50 படுக்கை வசதிகளுடன் கோவை காந்தி புரத்தில் 2015 இல் துவக்கினார். இன்று தரமான சேவையால் மக்களின் நன்மதிப்பை பெற்று 750 படுக்கை வசதிகளுடன் ராயல் கேர் அதிநவீன மருத்துவமனையாக விரிவுபடுத்தவுள்ளது.

தனது அயராத பணிகளுக்கும் இடையில் தன்னை ஒரு தடகள வீரராகவும் . கால்பந்து வீரராகவும் அடையாளப்படுத்திக் கொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார் . அரசியல், தத்துவம், பயணம் மற்றும் புவியியல் சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்.

இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்பின் மீது எப்போதும் ஈர்ப்பு கொண்டவர் , கொங்கு மண்டலத்தைப் பசுமைப் போர்வையாக்குவதையும் ,இயற்கை மிகை மண்டலமாக மாற்றுவதையும் தம் இலக்காக கொண்டுள்ள இவர் இரண்டு கோடி மரங்கள் நடவு செய்து பசுமை மண்டலங்ககளாகவும் ,இயற்கை மிகு மாவட்டங்களாகவும் மாற்றி மாசற்ற தூய்மையான காற்றை சுவாசிக்கவும் , “நீரின்றி அமையா உலகு”, நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கி வரும் தலைமுறைக்கு பயன் பெரும் நோக்கிலும் அதே சமயம் விவசாயிகள் பயன் பெரும் வகையிலும் ” உயிரின் சுவாசம் “ எனும் அமைப்பை 07/11/2018 அன்று உருவாக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் இயற்கையின் மீது அளவுகடந்த ஈர்ப்புக் கொண்டவர். பெரும்முயற்சியோடு 10 கோடி மரங்கள், 100 மாதங்களில் நட்டே ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறார். தனது வருமானத்தில் 20 சதவிகிதம் இயற்கைப் பணிக்காக செலவிடுகிறார்.

அறங்காவலர்கள்

திருமதி. ஶ்ரீ கலா மாதேஸ்வரன்

டாக்டர். மினு மாதேஸ்வரன்

செல்வி. லலித்சித்ரா மாதேஸ்வரன்

Newsletter & Membership