” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

மகிழ்வனம் தாவரவியல் பூங்கா

தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றம் மகிழ்வனம் தாவரவியல் பூங்கா மற்றும் உயிரின் சுவாசம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும், இயற்கை விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மகிழ்வனம் அமைப்பின் செயலாளர் மதிப்புயர் திரு சோமு (எ) பாலசுப்ரமணியம் அவர்கள் முன்னிலை வகிக்கவும் கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மதிப்புயர் முனைவர் கா.வீ பழனிசாமி அவர்கள் தலைமை வகிக்கவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராயல் கேர் மருத்துவமனைகளின் தலைவர் மதிப்புயர் மருத்துவர் மாதேஸ்வரன் அவர்கள் விழா சிறப்புரை நிகழ்த்தினார். விஷ்ணு இன்பெராஸ்டெக்சர் நிறுவனர் திரு செல்வராஜ் அவர்கள் தாய்மண் அறக்கட்டளை தலைவர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். துணை செயலாளர் திரு பகவதி சண்முகம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். விழா நிகழ்வுகளை சங்கோதி பாளையம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.